சென்னை எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

 
சென்னை எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

சென்னை எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் இடையே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில் வரும் 17-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ளது

சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் (06159) வருகிற 17-ந் தேதி முதல் தினமும் இரவு 11.35 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

சென்னை எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

மறுமார்க்கத்தில் மங்களூரு சென்ட்ரல்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06160) வருகிற 19-ந் தேதி முதல் தினமும் காலை 6.45 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இந்த ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, குளித்தலை, கரூர், புகழூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், வடகோவை, கோவை, போத்தனூர், பாலக்காடு, ஒட்டப்பாலம், சொரனூர், பட்டாம்பி, குட்டிப்புரம், திரூர், பரப்பாங்காடி, கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூர், கன்னபுரம், பையனூர், கோட்டிக்குளம், காசர்கோடு, மஞ்சேஸ்வர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

From around the web