பலாத்காரத்தின் போது மாணவி போராடியதற்கான ஆதாரமில்லை... கொல்கத்தா சம்பவத்தில் போலீசார் அறிக்கையில் அதிர்ச்சி!

 
கொல்கத்தா

சட்டங்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே இருப்பதாக பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில், பலாத்காரத்துக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில், பலாத்காரத்திற்கு எதிராக பெண் மருத்துவர் எதிர்த்துப் போராடியதற்கான ஆதாரம் சம்பவ இடத்தில் இல்லை என்று போலீசார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா மருத்துவர்

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், இது குறித்து புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு வரும் ஜனவரி 2ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதுகலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பலாத்காரம் செய்து கொலைச் செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எதிர்த்து மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கொல்கத்தா

இந்த சம்பவத்தில் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுப்பதில் துவங்கி, போலீசாருக்கு தகவல் கொடுப்பது, விசாரணை, சிசிடிவி காட்சிகள் என்று ஆரம்பம் முதலே தொடர்ந்து பல முரண்பாடுகள் இருந்த நிலையில், தற்போது பெண் மருத்துவர், பலாத்காரத்துக்கு எதிராகப் போராடிய ஆதாரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது மாணவியின் பெற்றோரை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web