இந்த மாதத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை.. இப்பவே ப்ளாண் பண்ணிக்கோங்க!
Jun 9, 2026, 07:05 IST
இந்த மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன. வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வெள்ளிக்கிழமை பண்டிகை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக அமைந்துள்ளன.

இந்த ஜூன் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 9 நாட்கள் வரை விடுமுறை நாட்கள் வரவுள்ளன. இதில் 4 வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மூலமாகவே வழக்கம்போல் 8 நாட்கள் விடுமுறை மாணவர்களின் கணக்கில் வந்து சேருகிறது.

இதுதவிர வரும் ஜூன் 26 வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனைத் தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து அந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை பள்ளிகளுக்குக் கிடைக்கிறது. இப்பவே இந்த விடுமுறை நாட்களான பயண திட்டத்தை ப்ளாண் பண்ணிக்கோங்க
