பயப்படும்படி ஒன்றும் இல்லை... ராமதாஸ் ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை - அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய சிகிச்சை நிபுணா்கள் திங்கள்கிழமை காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டனர்.

ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதையொட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார்.
பிறகு, மருத்துவமனயிலிருந்து வெளியே வந்த அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவர் 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிரவில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்தபிறகு, பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பாதாகவும் 6 மணி நேரத்துக்குப் பிறகு வெளியே அழைத்து வரப்படுவார் என்றும், இரண்டு நாள்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
கடந்த 2013-இல் இதே மருத்துவமனையில் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்று இதய பரிசோதனை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
