இஸ்ரோவின் எதிர்காலத் திட்டம் இவை தான்... நாராயணன் விளக்கம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இஸ்ரோவின் புதிய தலைவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உட்பட பல முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் பட்டமும் பெற்றவர். அவரின் தொழில்நுட்ப திறன்களாலும், பிரம்மாண்டமான திட்டங்களை கையாண்ட அனுபவம் உள்ளது. எனவே, இஸ்ரோவின் சிறப்பான வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசும்போது இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் பற்றியும், தலைவராக தான் தேர்வானது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து ” இஸ்ரோவின் தலைவராக நான் தேர்வாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜனவரி 14ம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது மிக முக்கியமான பொறுப்பாகும். நான் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து 41 ஆண்டுகள் ஆகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்தும் ” எதிர்காலத்தில் இஸ்ரோவுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, நிலவுக்கு மனிதர்களை அனுப்பி திரும்பவும் கொண்டு வரும் ககன்யான் திட்டம் இருக்கிறது. விண்வெளி நிலையம் அமைப்பதற்கான ஸ்பேடக்ஸ் திட்டம், நிலவின் மேற்பரப்பில் செயற்கைக்கோளை இறக்கி அங்கிருந்து மாதிரிகளை கொண்டுவரும் சந்திரயான் 4 திட்டம் ஆகியவை இருக்கிறது.
சந்திரயான் 3 செயற்கைக்கோள் 4000 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட நிலையில், சந்திரயான் 4 செயற்கைக்கோள் 9000 கிலோ எடையுடன் உருவாக்கப்பட உள்ளது. இஸ்ரோவின் அனைத்து திட்டங்களும் நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் அமையும்” எனவும் நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!