தேவர் ஜெயந்தி விழா | வாடகை வாகனங்களில் செல்ல அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விழா கொண்டாடுவது மற்றும் பசும்பொன் செல்வோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், டிஎஸ்பி அலுவலகத்தில் நடந்தது. டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறும் நிகழ்வுகள் குறித்து போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும். விழாவிற்கு செல்வோர் எண்ணிக்கை விவரங்கள் குறித்தும், புறப்படும் நேரம் மற்றும் திரும்பும் நேரங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளில் தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த கூடாது. டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
நிகழ்வுகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் போலீசார் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே சென்றுவர வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் சொந்த வாகனங்களில் செல்ல வேண்டும். வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட தொழில் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், சீர்மரபினர் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!