மீனாட்சியம்மன் கோவிலில் இந்து மத சான்றிதழ் கேட்டாங்க... நடிகை நமீதா குற்றச்சாட்டு!

 
நமீதா
 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, தன்னிடம் இந்து என்பதற்கு மத சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தன்னிடம், தான் இந்து என்பதற்கு அடையாளமாக இந்து மத சான்றிதழ் வேண்டும் என கோவில் அதிகாரி முத்துராமன் என்பவர் கேட்டதாக நடிகை நமீதா சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். 


இன்று காலை தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நடிகை நமீதா சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய கோவில் அதிகாரி முத்துராமன் என்பவர் நமீதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

நமீதா

தன்னிடம் இந்துவா என்று கேட்டது பிரச்சினை இல்லை என்றும், தன்னிடம் அவர் கேட்ட விதம்தான் பிரச்சினை என நடிகை நமீதா தனது குற்றச்சாட்டில் கூறியுள்ளார். இது தொடர்பாக, இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web