வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை வெள்ளிப் பொருட்கள் கொள்ளை.. நான்கு பேர் அதிரடியாக கைது!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதியில் வசித்து வருபவர் சிவாஜி. இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா மளிகை கடை நடத்தி வருகின்றனர். இம்மாதம் 5-ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ராதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள், சங்கர், ஜோஸ் என்கின்ற பிரசாந்த், மற்றும் ராஜா ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடித்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!