13 அடி உயரம்... 54 அடி சுற்றுளவு... தஞ்சை பெருவுடையார் கோவிலில் அன்னாபிஷேகம்... ஆனந்த பரவசத்தில் அலைமோதும் பக்தர்கள்!!

 
அன்னாபிஷேகம்

இன்று நவம்பர் 15ம் தேதி ஐப்பசி பௌர்ணமி தினத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படும். இதனை காண பக்தர்கள் பரவசத்துடன் காத்துக்கிடப்பர். அன்னதரிசனம் காண்பவர்கள் அன்னதோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. 

தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் பண்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது தஞ்சை பெரிய கோவில். இதன் கட்டிடக் கலை நுணுக்கங்கள் இன்னும் உலகளவில் அறியப்படாத ஒரு மர்மமாக உள்ளது. பல்வேறு தரப்பினரையும் வியப்படையச் செய்து ஆராய்ச்சியில் ஆழ்த்தியுள்ள தஞ்சை பெரிய கோவிலை தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு வியந்து ரசித்து வருகின்றனர். மேலும் தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?
இங்கு கருவறையில் உள்ள பெருவுடையார் லிங்க வடிவில் 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமாக விளங்கி வருகிறது. அதன் மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அன்னாபிஷேகம்

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியில் பெருவுடையாருக்கு  அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து மாலை நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும். அன்னாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சீரும்சிறப்புமாக செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி பெருவுடையாரை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web