தமிழகத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்... மழையிலும் குவிந்த பக்தர்கள்!

 
முருகர் முருகன் திருக்கல்யாணம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பல மாவட்டங்களிலும் கொட்டும் மழையிலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவில்களில் குவிந்து முருகனை தரிசித்து சென்றனர்.

தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை நினைவுகூர்ந்தே கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில், தீபாவளிக்குப் பிறகு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் விரத வழிபாடு நடைபெற்று, இறுதி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருச்செந்தூர்

இவ்வாண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. நேற்று சூரசம்ஹாரம் நிகழ்வில், ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்த காட்சியை பக்தர்கள் பக்தி உணர்வுடன் கண்டனர்.

இன்று விழாவின் ஏழாம் நாளாக, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் முருகர்

அதேபோல் ஊட்டி அருகே மஞ்சூர் அண்ணமலை முருகன் கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

நாளை விடையாற்றி உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது. கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் இன்று திருக்கல்யாணம் கண்ட பின் மகிழ்ச்சியுடன் தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?