தமிழ்நாடு போலீஸ் மேல நம்பிக்கையில்ல... திருமா பரபரப்பு!

 
திருமா

 தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து  தமிழக அரசு பல மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிக்கையில் ஏற்பில்லை என மற்ற அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

வேங்கைவயல்

இந்நிலையில்  வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து   தமிழ்நாடு அரசு  வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் இவர்களின்  செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு  அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

வேங்கைவயல்
இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து திருமா  வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை; சிபிஐ விசாரணை மீதும் நம்பிக்கை இல்லையென்றாலும் வேறுவழி தெரியவில்லை. வேங்கைவயலில் போராடும் விசிகவினரை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து  மீண்டும் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். வேங்கைவயல் விவகாரம் குறித்து ஜனவரி 27 ம் தேதி சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். வேங்கைவயலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் செல்வதாக தகவல் வந்தததும் அதற்கு நான் ஆதரவு தெரிவித்தேன். ஆனால் வேங்கைவயல் குறித்து தவெக தலைவர் விஜய் எதுவும் பேசவில்லை என கூறினார்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web