நாடு முழுவதும் 233 மையங்களில் ஒரு மாதம் திருப்பாவை சொற்பொழிவுகள்.. திருப்பதி தேவஸ்தானம் அசத்தல்!

 
திருப்பாவை

புனிதமான தனுர் மாதத்தை (மார்கழி) முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), தனது ஆழ்வார் திவ்ய பிரபந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் மொத்தம் 233 மையங்களில் ஒரு மாதம் முழுவதும் புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு திருப்பாவை சொற்பொழிவுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி

இந்தத் திருப்பாவைச் சொற்பொழிவு நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 14-ஆம் தேதி வரை ஒரு மாதம் முழுவதும் நடைபெறும். இந்தத் திருப்பாவைச் சொற்பொழிவுகள் நாடு முழுவதும் கீழ்க்கண்ட மையங்களில் நடத்தப்பட உள்ளன:

தமிழகத்தில்: 73 மையங்கள், ஆந்திர மாநிலத்தில்: 76 மையங்கள், தெலுங்கானாவில்: 57 மையங்கள், கர்நாடகத்தில்: 21 மையங்கள், புதுச்சேரி: 4 மையங்கள், புதுடெல்லி மற்றும் ஒடிசாவில் தலா 1 மையம்

திருப்பதி பெருமாள் வெங்கடாஜலபதி துளசி

தனுர் மாதத்தில் (மார்கழி) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் சுப்ரபாதத்திற்குப் பதிலாகத் திருப்பாவை பாராயணம் செய்யப்படும். மேலும், திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கம் மற்றும் கபிலத்தீர்த்தம் சாலையில் உள்ள வரதராஜ சுவாமி கோவிலிலும் திருப்பாவை சொற்பொழிவுகள் நடத்தப்பட உள்ளன.

12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் இயற்றிய 30 பாசுரங்களின் தொகுப்பே திருப்பாவை ஆகும். கூட்டாக விரதம் செய்யும்போது அதிக பலன் கிடைக்கும் என்ற மரபின்படி, இந்த மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் திருப்பாவை சாத்துமுறை நடத்தப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!