சிவன் கோவில்களில் திருவாதிரை திருவிழா... 5ம் நாள் சிறப்பு பூஜைகள்!
தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் திருவாதிரை திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ளது. இன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் 5ம் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா ஜன.4ம் தேதி தொடங்கியது. இவ்விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடன தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோயில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம் பட்டர் ஆகியோர் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!