திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி 2 நாட்களாக குறைப்பு... ஜன.1ம் தேதி நிகழ்ச்சிகள் ரத்து!
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழக அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாகவும் அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்திருந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது.
இன்று காலை முதல்வர் ஸ்டாலின் வெள்ளிவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, வள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையெ அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தைத் திறந்து வைக்கிறார்.
முன்னதாக கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. நாளை டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டு, டிசம்பர் 31ம் தேதியுடன் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையியும், விவேகானந்தரின் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியுள்ளது. இரவு நேரத்தில் திருவள்ளுவர் சிலை லேசர் ஒளி வெள்ளத்தில் வண்ணமயமாக ஜொலிக்கிறது. கன்னியாகுமரி சுற்றுவட்டாரம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி முழுவதும் மின்னொளிகளால் ஜொலிக்கிறது. சுற்றுலா பயணிகள் மெய்மறந்து ஆர்வமுடன் வள்ளுவர் சிலை மிளிர்வதைக் கண்டு ரசிக்கின்றனர்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!