இதுதான் பவதாரணியின் கடைசி ஆசை... கணவர் சபரிராஜ் உருக்கம்!

கடந்த 2002ம் ஆண்டில் ரேவதி இயக்கத்தில் வெளியான மித்ர் மை பிரண்ட் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரேவதி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஃபிர் மிலேங்கே படத்திலும் இசை அமைத்திருந்தார். 1991ம் ஆண்டில் இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமண மாலை இசை தொகுப்பிலும் இவர் பாடல் பாடியுள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் இசையமைத்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவர் புற்றுநோய் காரணமாக கொழும்பில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தார். அங்கு பவதாரணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீர் மாரடைப்பும் ஏற்பட்டதால் பவதாரணி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2024 ஜனவரி 16ம் தேதி தானும் பவதாரணியும் சிகிச்சைக்காக இலங்கைக்கு கிளம்பியதாகவும் உடல்நிலை மோசமாகும் சூழல் இருந்ததால் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்ததாகவும் கூறினார்.
அப்போதுதான் பவதாரணி தன்னுடைய அப்பா இளையராஜா, இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருவதாகவும் அவரை பார்க்க வேண்டும் போல இருப்பதாகவும் கூறியதாக குறிப்பிட்டார். பவதாரணி ஆசைப்பட்டது போலவே ராஜா அங்கிளை பார்த்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பாவை பார்க்க வேண்டும் என்ற பவதாரணியின் ஆசையே கடைசி ஆசையாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். பவதாரணிக்கு பித்தப்பை புற்றுநோய் கடைசி நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இளையராஜா இசையில் பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக அவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!