இன்று காலை இறுதிசடங்குகள்... இல.கணேசனின் சகோதரர் காலமானார்... முதல்வர் நேரில் அஞ்சலி!

 
இல கணேசன் சகோதரர்

நேற்று நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசனின் சகோதரர் இல.கோபாலன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இன்று காலை 10 மணியளவில் இறுதிசடங்குகள் நடைபெற உள்ளன.

பாஜக மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் துலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ள இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அவரது அண்ணன் இல.கோபாலன் (82) வயது மூப்புமற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இல.கணேசன்

அவருக்கு மனைவி சந்திரா கோபாலன் மற்றும் மகள் உள்ளனர். இல.கோபாலன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தி.நகர்வெங்கடநாராயண சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதேபோல, பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று காலை 10 மணியளவில் கிண்டியில் தகனம் செய்யப்பட உள்ளது.

இல.கணேசன்

இல.கோபாலனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web