தமிழ்நாட்டில் கண்டிப்பாக இது நடக்காது… ஆளுநரின் பேச்சுக்கு சீறிய திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா தமிழகத்தில் ஒரு தலித் முதல்வராகணும் என பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக ஆளுநர் தன்னை ஒரு அரசியல்வாதி போன்று தான் அடையாளப்படுத்தி கொள்கிறார். அவர் ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து தொடர்ந்து பேசுவதும் செயல்படுவதும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர் தலித்துகளை வலதுசாரி பக்கம் கவர நினைக்கிறார். குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பக்கம் தலித்துகளை ஈர்ப்பதற்காக தான் அடிக்கடி இதைப்பற்றி ஆளுநர் பேசுகிறார். ஆளுநர் ரவி ஒரு தலித்தை முதல்வராக்க வேண்டும் என கூறுவது அப்பாவி தலித்துகளை வளைத்து போடுவதற்கான முயற்சியின் ஒரு கட்டம் தான்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்துகள் ஒரு போதும் கவர்னரின் சூழ்ச்சி பேச்சினை நம்பி ஏமாற மாட்டார்கள் என கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!