தூத்துக்குடி அனல்மின் நிலையம்: ஒரே நேரத்தில் 5 அலகுகள் நிறுத்தம் - 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

 
தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொடர் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அங்குள்ள 5 அலகுகளும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அனல்மின் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த மொத்த 1,050 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. 4-வது மற்றும் 5-வது யூனிட்டுகள் ஏற்கெனவே பராமரிப்புப் பணிகளுக்காகச் சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டிருந்தன.

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

இந்தச் சூழலில், இயங்கிக் கொண்டிருந்த ஒரே அலகான 3-வது யூனிட்டும் பழுது காரணமாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு நிறுத்தப்பட்டது. இதனால் அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்களும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டு, 1,050 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!