இலங்கை‌ வாழ் இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல்.. நாட்டை விட்டு வெளியேற எச்சரிக்கை!

 
இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடந்து வருகிறது. இதில் தங்களுக்கு ஆதரவாக வந்த ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் யாஹ்யா ஷின்வார் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல்

இதனால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது இலங்கையில் கடலோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இருந்து வரும் இஸ்ரேலியர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இலங்கையில் வாழும் சில முஸ்லிம் அமைப்புக்களால் இலங்கை வாழ் இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள இஸ்ரேலிய மக்களை உடனடியாக இலங்கையை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web