நடிகர் சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல்!
மிரட்டல் விடுத்தவர் மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் எனக் கூறியதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.அந்த மிரட்டல் அழைப்பில் சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவரைக் கொன்று விடுவோம் எனக் கூறியுள்ளார்.
இந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சல்மான்கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர். கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த மிரட்டலில் தொடர்புடையதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!