திபெத் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 53 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்: அதிகாரிகள் தகவல்!
இன்று காலை நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இன்று காலை 9:05 மணியளவில் திபெத்தில் ஸிகேஸ் நகரத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நண்பகள் வரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 62 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, நிலநடுக்கம் காலை 6:35 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே மேலும் இரண்டு பூகம்பங்கள் இப்பகுதியில் தாக்கியதாக NCS தரவுகள் தெரிவித்துள்ளது.

இரண்டாவது நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் காலை 7:02 மணிக்கு 10 கிமீ ஆழத்திலும், மூன்றாவது நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் 7:07 மணிக்கு 30 கிமீ ஆழத்திலும் பதிவாகியுள்ளது.

நேபாளத்தில் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் மோதி, பூகம்பங்கள் அடிக்கடி நிகழும். கடந்த 2015ல் நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்ததும், 22,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web