பயணிகளின் கனிவான கவனத்திற்கு... வைகை உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேர மாற்றம்!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளின் காரணமாக சில ரயில்களின் இயக்க நேரங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி:

நவம்பர் 15ஆம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12292), வழக்கமான இரவு 11.30 மணிக்கு பதிலாக 11.55 மணிக்கு புறப்படும் — 25 நிமிட தாமதம்.
வைகை எக்ஸ்பிரஸ் (12635) — சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி நாளை (சனிக்கிழமை) புறப்படும் ரயில் 20 நிமிடம் தாமதமாக புறப்படும். மேலும், வரும் நவம்பர் 3, 5, 8, 12, 13, 15 தேதிகளில் புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கத்தை விட 30 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா நோக்கி புறப்படும் எக்ஸ்பிரஸ் (16354) — நவம்பர் 8 மற்றும் 15 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும்.
ஹவுரா–சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் (12839) — நவம்பர் 12ஆம் தேதி புறப்படும் ரயில் 55 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சில்சார்–கோவை எக்ஸ்பிரஸ் (12516) — நவம்பர் 11ஆம் தேதி புறப்படும் ரயில் 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
சண்டிகார்–மதுரை எக்ஸ்பிரஸ் (20494) — நவம்பர் 5ஆம் தேதி புறப்படும் ரயில் 40 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும்.
இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
