திருமலை தேவஸ்தானம் வெளியிட்ட 2026 காலண்டர், டைரிகள் விற்பனை தொடக்கம்!
ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் மற்றும் டைரிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் இவை வெளியிடப்பட்டு, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆஃப்லைனிலும், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக ஆன்லைனிலும் பக்தர்களுக்குக் கிடைக்கின்றன.
TTD’s 2026 calendars & diaries are now on sale offline at TTD counters in Tirumala, Tirupati & other cities, and online via https://t.co/2hk52bQl5A / https://t.co/2J0qkUfXpu.
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) October 8, 2025
Devotees can also order online & get them delivered to their doorstep.#TTD #Tirumala #Tirupati pic.twitter.com/dnkYVbDqzA
இந்த ஆண்டு தேவஸ்தானம் 12 பக்க மற்றும் 6 பக்க நாள்காட்டிகள், டேபிள்-டாப் காலண்டர்கள், டீலக்ஸ் மற்றும் சிறிய டைரிகள், ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பத்மாவதி தாயார் படங்களுடன் பெரிய நாள்காட்டிகள் உள்ளிட்ட பல வடிவங்களில் வெளியிட்டுள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விற்பனை மையங்கள், நியூ அக்கவுண்ட்ஸ் கட்டிடம், தியான மந்தீர், ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடைகள், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம், திருச்சானூர் பதிப்பகங்கள் மற்றும் புத்தக நிலையங்களில் இவை கிடைக்கின்றன.
மேலும் விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புது தில்லி, மும்பை, வேலூர், ராஜமுந்திரி, கா்னூல், காக்கிநாடா, நெல்லூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்களிலும் விற்பனை நடைபெறுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், வழக்கம்போல தபால் துறை மூலம் தங்கள் வீடுகளுக்கு நேரடியாக நாள்காட்டிகள் மற்றும் டைரிகளைப் பெறலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
