இன்று அனைத்துக்கட்சி கூட்டம்... நாளை பட்ஜெட் கூட்டத் தொடர்!

 
கட்சி கூட்டம்


இந்தியாவில் நாளை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குநறிப்பு தெரிவித்திருந்தது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை ஜனவரி 31ம் தேதி  தொடங்குகிறது.

கட்சி கூட்டம்

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிஅமைச்சர்   நிர்மலா சீதாராமன் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 13ம் தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து .2வது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடையும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார். நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3ம் தேதி, 4ம் தேதி மற்றும் 6ம் தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார்.  

நிர்மலா பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என மத்திய அமைச்சர்  கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web