மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

 
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாங்கிய 2,756 கோடி ரூபாய் கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது’. என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

From around the web