தொடர் சரிவில் தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாள்களில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்தது.
இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 4 நாட்களுக்குப் பிறகு நேற்று நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ10 குறைந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6935க்கும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 55,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் கடந்த சில நாள்கள் குறைந்த நிலையில், நேற்றும் இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 99க்கும் பார்வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!