சர்ரென குறைந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2000ல் தங்கத்தின் சராசரி விலை 4,400 ரூபாயாக இருந்தது. கடந்த 24 வருடங்களில் ஒரு சவரனுக்கு மட்டும் ரூ 55000 அளவிற்கு உயர்ந்துள்ளது.
அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஒரு சவரன் மட்டுமே ஒரு லட்சத்தை தொடும் என்பதால் தற்போதே தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய நடுத்தர மக்கள் விரும்புகிறார்கள். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் சில வருடங்களில் பல லட்சங்களில் லாபம் கிடைக்கும் என்பதால் போட்டி போட்டு தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கிய நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தது. இன்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ40 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7110க்கும், சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ56,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!