வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... மீண்டும் எகிறிய தங்கம்... !

 
தங்கம்

 தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2025ன் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து அதிர்ச்சியை அளித்து வருகிரது. இதன்படி  தங்கத்தின் விலையானது தற்போது ரூ58000த்தை கடந்துள்ளது.  இந்த விலை உயர்வானது வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.  

தங்கம்
2025 ம் ஆண்டு  இறுதிக்குள் சவரனுக்கு ரூ20000 வரை அதிகரிக்க கூடும் என்கின்றனர் தங்க நகை வியாபாரிகள்.  இதனையடுத்து  நகைப்பிரியர்கள் தற்போதே தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் கூடுகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.  2024ல்   மட்டும் ஒரு சவரனுக்கு ரூ22000 வரை உயர்ந்துள்ளது. மேலும் அவரச தேவைக்கு தங்க நகைகளை உடனடியாக அடகு மற்றும் விற்பனை செய்ய முடியும் என்ற காரணத்தால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர்.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்


 கடந்த வாரம் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ35 உயர்ந்தது.  இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும்   அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ25 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7284க்கும்,  சவரனுக்கு ரூ200அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 58280க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web