புதிய உச்சம் தொட்ட தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலையில் ஆபரணத்தங்கத்தின் மீதான இறக்குவதி வரி குறைக்கப்பட்டதால் சவரன் ரூ.51,000-க்கு கீழ் சென்ற தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ30 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7555க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ105க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ105000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!