தை வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜனவரி 22ம் தேதி  வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்றாலும் ரூ60000க்கு குறையவில்லை.

தங்கம்

அந்த வகையில் ஆபரணதங்கம் சவரனுக்கு புதன்கிழமை ரூ.680ம், வியாழக்கிழமை ரூ. 120ம் உயர்ந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 60,880க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஜனவரி 31ம் தேதி  வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 960 உயர்ந்துள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இன்றைய விலை நிலவரப்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 7730க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 61,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ. 2,240 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 107க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web