மாதத்தின் முதல் நாளில் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி... தொடர் உச்சத்தில் தங்கம்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இது நகைப்பிரியர்கள் , இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தங்கத்தின் விலை ஜனவரி 22ம் தேதி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அந்த வகையில் அன்றைய தினம் சவரனுக்கு ரு ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்று முதல் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ60000க்கு கீழ் குறைந்தபாடில்லை. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 வரை உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஒரு சவரனுக்கு ரூ 680ம், வியாழக்கிழமை ரூ.120ம் உயர்ந்து ரூ.60,880க்கு விற்பனையாகி வந்தது. நேற்று ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத அளவில் சவரனுக்கு ரூ. 960 ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது.
இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7745க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.61,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் எதுவுமின்றி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ107க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி விலை ரூ107000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை தற்போது திருமண சீசன் என்பதால் நகை வாங்கும் தேவை அதிகரித்திருப்பதால் விலை ஏறியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!