தங்கம் அதிரடி விலை குறைப்பு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்

 தமிழகத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

தங்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வந்தது.  ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர்  30ம் தேதி  சவரன் ரூ.59000ஐ  கடந்து புதிய உச்சத்தை தொட்டது.அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக நேற்று முன்தினம் தங்கம் விலை 2 முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.7790க்கும், சவரனுக்கு ரூ.62,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7705க்கும்,  சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.61,640 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web