ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,680 குறைவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
தங்கம்
 

சர்வதேச அரசியல் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60,000 இருந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி ரூ.97,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் அதன் பின்னர் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இன்று காலை சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,400 குறைந்து ரூ.93,600-ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.11,700-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் வாங்கத் தயங்கியிருந்த இல்லத்தரசிகள் சிறிது நிம்மதி அடைந்தனர்.

தங்கம்

ஆனால் மாலை நேரத்தில் மீண்டும் தங்க விலை அதிரடியாக குறைந்தது. தற்போது சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.11,540-ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,680 மற்றும் கிராமுக்கு ரூ.460 குறைந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!