தங்கம் விலை மீண்டும் உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தீபாவளிக்கு முன் உச்சத்தை தொட்ட தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகிய நிலையில், அதன் பின் விலை குறைந்து வந்தது. கடந்த 18-ந்தேதியிலிருந்து தங்கம் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்தது. குறிப்பாக 22-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460 மற்றும் சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு சரிந்தது. அதன் பின்னரும் விலை மேலும் கீழே சரிந்தது.

நேற்று தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு பதிவாகியது. காலை கிராமுக்கு ரூ.150, பிற்பகலில் ரூ.225 என மொத்தம் கிராமுக்கு ரூ.375, சவரனுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து, ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனையாகியது. விலை உயர்வைச் சந்தித்த போது தினமும் இரு முறை உயர்ந்த தங்கம், இப்போது இரு முறை சரிவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழலில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை கிராமுக்கு ரூ.135, சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 680-க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலையும் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.165 இருந்த நிலையில், இன்று ரூ.1 அதிகரித்து ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
