தங்கம் விலை மீண்டும் உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மாறி மாறி குறைந்தும், உயர்ந்தும் வருவதால் வியாபாரிகளும், நகை ஆர்வலர்களும் குழப்பத்தில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது. தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வு பதிவாகி வந்தது. இதே போக்கில் சென்றால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என நகை வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அடுத்த சில நாட்களில் சூழல் முற்றிலும் மாறியது. கடந்த 18ஆம் தேதி முதல் தங்கம் விலை சரிவை சந்தித்தது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை, திடீரென சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது. அதன் பிறகு விலை நிலைமை சீராக இல்லாமல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் விலை குறைந்து, அதே நிலை நேற்று தொடர்ந்தது. அப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.10, சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,310-க்கும், ஒரு சவரன் ரூ.90,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேசமயம், வெள்ளி விலையில் மாற்றமில்லை; ஒரு கிராம் ரூ.165, ஒரு கிலோ ரூ.1,65,000 என விற்பனை தொடர்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
