இன்று `இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்!

 
இன்று `இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

இன்று `இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று `இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்!


இதன்படி வாரத்திற்கு ஒரு நாள் 1 மணி முதல் 2 மணி நேரங்கள் வரை 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று புதன்கிழமை மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

From around the web