இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... இராஜ ராஜ சோழன் சதய விழா.. தஞ்சையில் உள்ளூர் விடுமுறை!
இன்று நவம்பர் 1ம் தேதி தஞ்சாவூரில் இராஜ ராஜ சோழனின் 1040வது சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில், இராஜராஜசோழர் பிறந்த தினமும் முடிசூட்ட நாள் நினைவாக சதயவிழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி இந்த ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாளான நேற்று காலை 8.15 மணிக்கு தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் தொடங்கியது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். பின்னர் பெரியகோவில் வளாகத்தில் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி, கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இன்று நவம்பர் 1ம் தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் இரண்டாம் நாள் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து கோவில் ஊர்வலம், திருமுறை திருவீதியுலா, அபிஷேகம், தேவார இசை, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மன் செப்புத் திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் வீதியுலா நடத்தப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7.05 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறும்.
விழாவில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்குகிறார். அரண்மனை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே முன்னிலை வகிக்கிறார். சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக இன்று நவம்பர் 1ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
