இன்று அன்னாபிஷேகம்... வீட்டில் அன்னாபிஷேகம் செய்ய நல்ல நேரம்... சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்!

 
காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

இன்று ஐப்பசி மாத பெளர்ணமி அன்னாபிஷேகம். இன்றைய தினத்தை அன்னாபிஷேகம் செய்தால் ஏழேழு தலைமுறைக்கும் அன்னதோஷம் இருக்காது. நம் சந்ததியினரும் அன்னத்திற்கு பஞ்சமில்லாமல் வாழ்வார்கள். அத்தனை விசேஷமானது, நமது வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமைப் பெற்றது இந்த ஐப்பசி மாத பெளர்ணமி. சிவ பெருமானுக்கு எத்தனைப் பொருட்களால் அபிஷேகம் செய்தாலும் இந்த ஒரு நாளில் செய்யும் அன்ன அபிஷேகத்திற்கு ஈடாகாது. அத்தனைப் பலன்களைத் தரும் வல்லவை இந்த அன்னாபிஷேகத்திற்கு உண்டு. வீட்டில் அன்னாபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு காய்கறிகள், பழங்கள், அரிசி வாங்கிக் கொடுங்கள்.

இந்த நாளில் சிவனுக்கு படைக்கப்படும் ஒரு பருக்கை அன்னம் ஒரு சிவலிங்கத்திற்கு சமமாக கருதப்படும். அதனால் தான் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடான கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணிய பலன் கிடைக்கும். அது மட்டுமல்ல அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல அவரது தலைமுறைக்கே அன்ன தட்டுப்பாடு ஏற்படாது. 

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் சிவலிங்கம் வைத்திருந்தால் வீட்டிலேயே அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடலாம். வீட்டில் இருக்கும் கருங்கல், வெள்ளி, பித்தளை, செம்பு, ஸ்படிகம் போன்ற பொருட்களால் ஆன லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மற்ற பொருட்களால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடக் கூடாது. 

வீட்டில் சிவலிங்கத்திற்கு எடுத்தவுடன் அன்னத்தால் அபிஷேகம் செய்துவிடக் கூடாது. முதலில் சுத்தமான தண்ணீர், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் என எந்த பொருட்கள் உள்ளதோ அவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்த பிறகே இறுதியாக அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

அன்னாபிஷேகம் செய்ய வேண்டிய உகந்த நேரம்:

இன்று நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஐப்பசி மாத பெளர்ணமி துவங்குகியது. இன்று இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதிப்படுமோ அந்த நேரத்தில் மனதுள் உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லிக் கொண்டு, அவை நிறைவேற வேண்டுதலுடன் அன்னாபிஷேகம் செய்யலாம். 

காலை 6 மணி முதல் 10.20 வரை செய்யலாம். அதன் பின்னர் பிற்பகல் 12.10 மணி முதல் 1.10 மணி வரை செய்யலாம். இந்த நேரங்களில் செய்ய இயலாதவர்கள் பின் மாலை 4.35 மணி முதல் 6 மணி வரை செய்யலாம்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web