இன்று அனுமன் ஜெயந்தி... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்... 100008 வடைமலை அலங்காரம்.. அதிகாலையில் குவிந்த பக்தர்கள்!
இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டுள்ளது. 1,00,008 வடை மாலை அலங்காரத்துடன் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து செல்ல பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நடைபெறுகிற அனுமன் ஜெயந்தி விசேஷமானது.
மார்கழி மாத அமாவாசை தினத்தில் மூல நட்சத்திர தினத்தில், சுசிந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலைப் போலவே நாமக்கல் ஆஞ்சநேயரை வழிப்பட இந்த அனுமன் ஜெயந்தி நாளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 100008 வடைகளால் ஆன மாலை சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். வடைமாலை அலங்காரத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வடைமாலையில் இருந்து 100008 வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!