Connect with us

அரசியல்

இன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்!

Published

on

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. இவர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889,நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார்.

மிகச்சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு ஹிந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டன. செல்வசெழிப்பில் வளர்ந்தவர் நேரு. அவரது தந்தை மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற நேருவை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பி படிக்க வைத்தார்.

ஹார்ரோவில் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 ல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்த பிறகு 1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.

ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் தந்தையின் வேண்டுகோளுக்காக மட்டுமே பின்னாளில் தெரிவித்துள்ளார். 1912ல் சட்டப் பணிசெய்ய இந்தியா திரும்பினார்.1916ம் ஆண்டு கமலா கவுலை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936ல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை மற்றொரு திருமணம் செய்து கொள்ளவில்லை.
1916 ல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 ல் ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.

1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.

சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.

முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.
நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று குறிப்பிடுவதுண்டு.

இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள். தேர்தலில் நேரு காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு அந்நாளில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப்போன நேரு பதவியை துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1953 நேருவின் ஆரோக்கியம் குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.

சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார். 1964 ல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார்.

அவர் 1964 மே மாதம் இதே நாளில் அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.கன்னியாகுமரி முதல் டெல்லி வரை ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா18 mins ago

இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

சிவகங்கை24 mins ago

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆன்மிகம்39 mins ago

இந்த 5 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்ட மழை தான்!

செய்திகள்40 mins ago

இன்று (ஜூலை 28) பெட்ரோல், டீசல் விலை

குற்றம்53 mins ago

கவர்மெண்ட் வேலை கிடைக்கும்! 18 பேரிடம் ரூ10,00,000/ ஏமாற்றி மோசடி!

செய்திகள்1 hour ago

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஜூலை 28) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

இந்தியா1 hour ago

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

இந்தியா2 hours ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா2 hours ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்3 hours ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending