இன்று தை அமாவாசை... சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்... நாளை வரை அனுமதி!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை. சிவன் மலையேற்ற தளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த மலைக்கு சித்தர்களின் பூமி என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்த மலைக்கு சாதரணமாக எல்லா நாட்களிலும் செல்ல அனுமதியில்லை.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் என மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் அனுமதி வழங்கப்படும் நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி போன்ற நாட்களில் சதுரகிரி மலையில் கூட்டம் இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக நாளை ஜனவரி 30ம் தேதி வரை மலை மேல் உள்ள கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். அதே போன்று கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க கூடாது என்றும், இரவில் மலையில் தங்க அனுமதியில்லை எனவும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!