இன்று மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி.. இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு!

 
கிரிக்கெட்

இன்று மகளிருக்கான 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியாவுக்கு இன்றைய இறுதிப்போட்டியில் நேருக்கு நேராக மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாதவை என்பதால், இன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே மைதானத்தில் அரையிறுதி போட்டியில் 339 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திய இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வதில் முன்னிலை வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் சுமார் ரூ.125 கோடி அளவிலான பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஆண்கள் அணிக்கு வழங்கிய அதே அளவிலான ஊதியம் மற்றும் பரிசுத் திட்டத்தை மகளிர் அணிக்கும் வழங்குவதாக பிசிசிஐ முன்பே உறுதியளித்திருந்தது. 2017ல் லார்ட்ஸ் மைதானத்தில் நெருங்கிய வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பரிசை விட, இம்முறை பரிசுத் தொகை 10 மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!