இன்றே கடைசி தேதி... குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்ற மறந்துடாதீங்க!

 
குரூப் 4 தேர்வு
இன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களது சான்றிதழைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதியாக நவம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால மறந்துடாதீங்க. குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் தோ்வா்கள் இன்று மாலை வரையில் காத்திராமல் உடனடியாக உங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
இது குறித்து தோ்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குரூப் 4 தோ்வு எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனா். அதற்கான கால அவகாசம் நவம்பர் 21ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

டிஎன்பிஎஸ்சி

அதன்படி, கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கணினி வழியே நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அவற்றைப் பதிவேற்றம் செய்வது அவசியம். இதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. சான்றிதழ்களை இன்று நவம்பர் 21ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய தோ்வா்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web