இன்று செல்வம் குவிக்கும் தை ஞாயிறு... எப்படி வழிபடுவது?! என்னென்ன பலன்கள்!

 
பூஜை அறை

தை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த பிரார்த்தனை மறக்காம செய்து பாருங்க. அதன் பின்னர் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் பனி போல் உருகி காணாமல் போய்விடும். பொதுவாகவே நாள், கிழமை பார்த்து செய்கிற விரதங்களுக்கு கை மேல் பலன் உண்டு.

தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது ஆயுளை விருத்தி செய்யும். பிற கடவுள்களை எல்லாம் உருவ வழிபாட்டுடன் தொடர்பு கொள்கிறோம். சூரியனைக் கண்களால் காணுகிறோம். தினந்தோறும் காலையில் சூரிய உதயத்தின் போது, சூரியனை வழிபட்டு செய்கிற செயல்களை கைகூடுகிறது.

தொழிலுக்கும், ஆரோக்கியத்திற்கும், பணம், பதவிக்கும், மரியாதை, கெளரவத்திற்கும் சூரியனே மனது வைக்க வேண்டும்.  கடவுளை தொழ எல்லா நாட்களுமே நல்ல நாள் தான். நம் வினைகளுக்கு உகந்த நாளில் கடவுளை மனமுருகி பிரார்த்தனை செய்திட சிறப்பான பலன்களை பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.

காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

தை மாத ஞாயிற்றுக்கிழமையை மிஸ் பண்ணாதீங்க. மகாலட்சுமியின் பிரியமான இடங்களில் ஒன்று  துளசி மாலை. இந்த மாலை அணிந்திருப்பவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் நிரந்தர வாசம் செய்கிறாள். 

தை மாத ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் அன்னதானம் செய்த பலனைப் பெறலாம். ஏதாவது ஒரு  தை மாத ஞாயிற்றுக்கிழமையில் விரதத்தை தொடங்கி 12 வாரங்கள்  தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கபெற்று சிவபெருமானின் பேரருள் கிட்டும் என்பது அடியார்களது நம்பிக்கை. 

காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

இந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். முடிந்தால், அருகில் உள்ள சிவாலயத்தில் இருக்கும் சூரிய பகவானுக்கு கோதுமை நிவேதனம் செய்து விளக்கேற்றி வழிபடுங்கள். துன்பங்கள் சூரியனைக் கண்ட பனி போல் கரைந்தோடும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web