இந்த ராசிகாரர்களுக்கு இனி வாழ்வில் ஏற்றம் தான்!!

 
இந்த ராசிகாரர்களுக்கு இனி வாழ்வில் ஏற்றம் தான்!!

இன்றைய ராசி பலன்!

கார்த்திகை 11, நவம்பர் 27, 2021, சனிக்கிழமை.
நட்சத்திரம் : மகம்
யோகம்: அமிர்தயோகம்
இன்று பைரவர் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

இராகு காலம் :
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

எம கண்டம்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சுப ஹோரைகள்:
காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை
பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை

இந்த ராசிகாரர்களுக்கு இனி வாழ்வில் ஏற்றம் தான்!!

மேஷம்
ஆரோக்கிய கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. நண்பர்கள், உறவினர்கள் தொழிலில் ஆதரவு கரம் நீட்டுவார்கள். நல்ல காலம் இது. இனி வாழ்வில் ஏற்றம் தான். ஆனால், விட்டு கொடுத்து சென்றால் வர இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீண் பிடிவாதத்தால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பாருங்க!

ரிஷபம்
கஷ்டமான பாதையில் பயணிக்க வேண்டி இருந்தாலும், பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். நிதானமாக கையாள வேண்டிய கால கட்டம் இது. தவறு உங்கள் மீது தான் இருக்கும். அதனால், குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சமயோசிதமாக கையாளுங்க. மூத்தவர்களின் அனுபவ அறிவுரைகள் காது கொடுத்து கேட்டு, தொழிலில் வளர்ச்சி காண வேண்டிய நேரம் இது.

மிதுனம்
உங்களின் ராசிக்கு இனி ஏற்றம் தான். குரு பெயர்ச்சி பலன்களைப் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். ஆனந்த செய்திகள் வீடு தேடி வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் பெருமைபடும் படி நடந்து கொள்வார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். ஆனாலும், வரவை விட செலவுகள் அதிகளவில் வரிசை கட்டி நிற்கிற கால கட்டம் இது. சுப செலவாக மாற்றிக் கொள்ளுங்கள். வீடு வாங்கும் அளவிற்கு பணம் புரளும். தவறாமல் நல்ல விதத்தில் முதலீடு செய்து சுப செலவாக மாற்றிக்கோங்க!

இந்த ராசிகாரர்களுக்கு இனி வாழ்வில் ஏற்றம் தான்!!

சிம்மம்
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். உடன் இருப்போர் நீங்கள் எண்ணியபடியே நடந்து கொள்வார்கள். தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு உண்டு. உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் உண்டு.

கன்னி
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் கால கட்டம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் இழுபறி நிலையே தொடரும். ஆரோக்கியத்தில் கவனமாயிருங்க. சிந்தித்து, நிதானத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெறலாம்.

துலாம்
நீங்கள் மனதில் நினைத்தபடியே புதிய தொழில் தொடங்குவதாற்கான காலம் கனிந்து வரும். அது வெற்றியையும் தரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும்.

விருச்சிகம்
இல்லத்தில் மனமகிழ்ச்சி நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

தனுசு
குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். அரசு வழி உதவிகள் கிடைக்கும். அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மகரம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். முடிந்தால் இன்றைய நாளை மெளன விரதம் இருந்து கடந்து வாருங்கள். பண விஷயத்திலும் அதிக கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்
திடீர் பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்குவந்து சேரும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிலைக்கும்.

மீனம்
இல்லம் தேடி மகிழ்ச்சி செய்திகள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

From around the web