Connect with us

ஆன்மிகம்

இன்று பிள்ளைப்பேறு அளிக்கும் சஷ்டி விரதம்!

Published

on


முருகப்பெருமானுக்கு சஷ்டி உகந்த நாள். அதிலும் செவ்வாய்கிழமைகளில் வரும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். `சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பது அனுபவ மொழி.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.

இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

இந்த நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம்.

This image has an empty alt attribute; its file name is 1.jpg

வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.


உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம்.

murugan krithigai
murugan krithigai

முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம். சஷ்டி விரதம் இருந்து முருகனின் திருவருள் பெறுவோம்.

இந்தியா4 hours ago

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ’பார்டர்’.!!

ஆன்மிகம்5 hours ago

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

செய்திகள்6 hours ago

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

உலகம்7 hours ago

ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

செய்திகள்7 hours ago

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

இந்தியா8 hours ago

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

குற்றம்9 hours ago

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

சினிமா9 hours ago

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்தியா9 hours ago

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

அரசியல்10 hours ago

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

செய்திகள்2 months ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு4 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்4 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி2 months ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending