இன்னைக்கு இந்த 4 இஸ்ரேலிய பெண்களும் ரிலீஸ்... ஹமாஸ் அறிவிப்பு !

 
ஹமாஸ்


 
இஸ்ரேல் ஹமாஸ் போர் 2023 அக்டோபரில் தொடங்கிய நிலையில் இங்கு பெண்கள் குழந்தைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.   காசா நகரில் உள்ள பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தற்போது இடைக்கால நிவாரணமாக 6 வார கால போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.  
இந்த 6 வார கால போர் நிறுத்தத்தை அடுத்து காசா நகரத்து மக்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு தாங்கள் வசித்த இடங்களுக்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம், உணவு போன்ற  அத்தியாவசிய உதவிகளும் கிடைக்கப்பெற்று வருகின்றன. அதே போல பணய கைதிகளும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஹமாஸ்


இந்த 6 வார கால போர் நிறுத்தத்தில் ஹமாஸ் தரப்பில் கைதாகியுள்ளதில் 33 பணய கைதிகளையும், இஸ்ரேல் தரப்பில் கைதாகியுள்ள சுமார் 2000 கைதிகளையும் விடுவிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.  அதன் படி கடந்த வாரத்தில்  3 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதே போல பணய கைதிகளாக இருந்த காசா நகர் மக்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்தது. இந்த வாரம் 2ம் கட்ட விடுவிப்பின்படி  இன்று ஹமாஸ் அமைப்பு விடுவிக்க உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் விவரத்தை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஹமாஸ்

அதில் லிரி அல்பாக் (வயது 19), கரினா அரிவ் (வயது20) , டேனியலா கில்போவா (வயது 20) மற்றும் நாமா லெவி (வயது 20) ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளது.  இவர்கள் நான்கு பேரும் இஸ்ரேலிய ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள்.   இவர்களை  2023 அக்டோபரில் காசா எல்லைக்கு அருகாமையில் உள்ள நஹல் ஓஸ் இராணுவ தளத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதில் பலர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் பணய கைதிகளாக இருப்பதாகவும், சிலர் கைது செய்யப்படும்போது நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web