விளையாடி கொண்டிருந்த குழந்தை அண்டாவில் விழுந்து உயிரிழப்பு.. கதறும் குடும்பத்தினர்!

 
அண்டா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சோமசுந்தரம் மற்றும் காஞ்சனாதேவி. இவர்களது இரண்டு வயது மகள் சபீனா பானு, அண்டா நிரம்பிய தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, ​​எதிர்பாராத விதமாக அண்டா தண்ணீரில் குழந்தை தலைகீழாக விழுந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, காணாமல் போன குழந்தையை பெற்றோர்கள் தேடினர். அப்போது, ​​அண்டாவிலிருந்து குழந்தை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web