தலைக்கவசத்துக்கு தக்காளி ஃப்ரீ!! குவியும் வாகன ஓட்டிகள்!!

 
தலைக்கவசத்துக்கு தக்காளி ஃப்ரீ!! குவியும் வாகன ஓட்டிகள்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

தலைக்கவசத்துக்கு தக்காளி ஃப்ரீ!! குவியும் வாகன ஓட்டிகள்!!


கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை விலையில் ரூ200 வரை விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு நடமாடும் பசுமை பண்ணை காய்கறி கடை மூலமும், குறிப்பிட்ட சில ரேசன் கடைகள் மூலமும் விற்பனையை தொடக்கியுள்ளது.

தலைக்கவசத்துக்கு தக்காளி ஃப்ரீ!! குவியும் வாகன ஓட்டிகள்!!


இந்நிலையில் சேலம் மாவட்டம் கோட்டையில் உள்ள ஹெல்மெட் கடை உள்ளது. இந்தக் கடையில் வித்தியாசமான அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.அதில் ரூ.449 மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விற்பனையை நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார்.


இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மக்களின் அன்றாட தேவையான தக்காளி இன்னல்களையும் அதே சமயத்தில் போக்க முடிவதில் பெரும் திருப்தி என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

From around the web