நாளை அன்னாபிஷேகம்... குழந்தை வரம் முதல் செல்வ வளம் வரை... ஐப்பசி அன்னாபிஷேகத்தால் என்னென்ன பலன்கள்?!
தமிழகத்தில் பல சிவாலயங்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் நாளை மறுநாள் நவம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அஸ்வினி நட்சத்திரம் சேர்ந்து வருவதால் திருவண்ணாமலையில் நாளை நவம்பர் 14ம் தேதி மாலை அன்னாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு எப்படி சிவராத்திரி உகந்த நாளோ அதைப் போலவே ஐப்பசி மாத அன்னாபிஷேகம் அத்தனை மகத்துவம் வாய்ந்த அபிஷேகமாக கருதப்படுகிறது.
இந்த வருடம் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் கூடுதல் சிறப்பாகவும் சக்திவாய்ந்ததாகவும் வெள்ளிக்கிழமையில் வருகின்றது. அதைப் போலவே அந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அன்றைய தினம் அஸ்வினி, பரணி மற்றும் கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்களும் சேர்ந்து வருவது தனிச்சிறப்பு. கூடவே பெளர்ணமி தினமாகவும் இருக்கிறது.
சிவபெருமானுக்கு நடத்தப்படும் இந்த ஐப்பசி அன்னாபிஷேகத்தை தரிசிப்பதே அத்தனை மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள். இந்த அன்னாபிஷேகத்தை தரிசிப்பது என்பது கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினம் சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகம் அதன் பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகையில் அந்த அன்னைத்தை உண்ணும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். வியாபாரத்தில் தொடர் தோல்விகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவை விலகும். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுபவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!